நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

365 0
15 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேருக்கு வௌிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய சந்தேகநபர்களுக்கு வௌிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்வரும் ஒக்டோபர் 24ம் திகதி வரை தளர்த்துவதற்கு உத்தரவிட்டார்.

இதன்போது பொலிஸ் நிதி மோசடி பிரிவினர், சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு அனைத்து அறிக்கைகளும் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனைப் படி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவ பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 24ம் திகதி விசாரிப்பதற்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.