நீரில் அள்ளுண்டு சென்ற இரு சிறுமிகளில் ஒருவர் சடலமாக மீட்பு

349 0

நுவரெலியா, ஆகரப்பத்தனை,– டொரிங்டன் தோட்டத்தில் வெள்ள நீரில் அள்ளுண்டு செல்லப்பட்ட 11 வயதான இரு பாடசாலை மாணவிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்நிலையில் மற்றைய சிறுமியை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் சிறுமியை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.