தேயிலையில் கலப்படம் செய்து மாட்டடிக்கொள்ளவேண்டாம். அவ்வாறானவர்களுக்கு எந்தவகையிலும் மன்னிப்பு வழங்க மாட்டோம். அத்துடன் தேயிலையில் சீனி கலப்படம் செய்த13 தொழிற்சாலைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை தேயிலை சபையில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தேயிலையில் எந்தவகையான கலப்படங்களையும் மேற்கொள்ளவேண்டாம் என தேயிலை தொழிற்சாலைகளுக்கும் தனி நபர்களுக்கும் தெரிவித்திருக்கின்றோம்.
அதுதொடர்பான சிவப்பு அறிக்கையையும் காண்பித்திருக்கின்றோம். அதனால் இந்த வேலையை யாரும் செய்யவேண்டாம் அவ்வாறு செய்து மாட்டிக்கொண்டால் அவர்களுக்கு நானோ தேயிலை சபையோ எந்த மன்னிப்பையும் வழங்கப்போவதில்லை.
அத்துடன் இவ்வாறானவர்களுக்காக யாரும் அரசியல் அழுத்தத்தையும் பிரயோகிக்கவேண்டாம். இதனால் எமது தேயிலையின் தரமே பாதிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.