தீர்வை வரியின்றி கோடிக்கணக்கான பெறுமதியுடைய வாகனங்களைக் கொள்வனவு செய்த 66 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா 4 கோடி ரூபா பெறுமதியான டயாட்டா லாண் குறூசர் சொகுசு வாகனத்தைக் கொள்வனவு செய்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் 5 கோடி ரூபா பெறுமதியான கம்மர் சொகுசு வாகனத்தைக் கொள்வனவு செய்துள்ளார்.
தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் இயக்கத்தின் தலைவருமான சித்தார்த்தன் 4 கோடி ரூபா பெறுமதியான டயாட்டா குறூசர் சொகுசு வாகனத்தைக் கொள்வனவு செய்துள்ளார்.
மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் 4 கோடி ரூபா பெறுமதியான டயாட்டா லாண்ட் குறூசர் சொகுசு வாகனத்தைக் கொள்வனவு செய்துள்ளார்.
இதைவிட அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், உதயன் பத்திரிகை நிறுவனத்திற்குச் சொந்தக்காரருமான சரவணபவன் 1750 ரூபா மட்டுமே வரியாகச் செலுத்தி சொகுசு வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.