பீடி இலை மற்றும் புகையிலையை சட்டவிரோதமாக கடத்தி வந்த 03 பேரை நேற்று (17) யாழ்ப்பாணம், மண்டதீவு சந்தியில் வைத்து கடற்படை கைது செய்துள்ளனர்.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை நிர்வகிக்கும் மண்டதீவு சந்தியில் உள்ள வீதித் தடுப்பில் சந்தேகத்திற்கு இடமான லொரி ஒன்றை சோதனை செய்யும் போது, அங்கு 44 பொதிகளாக நிரம்பிய 1359 கிலோ பீடி இலைகள் மற்றும் 31 பொதிகளாக நிரம்பிய 1034 கிலோ புகையிலை கைப்பற்றப்பட்டன.
அவை ஊர்காவற்துறையில் இருந்து யாழ்ப்பாணத்திக்கு லொரி மூலம் கொண்டு செல்லும் போதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் 37 மற்றும் 47 வயதுடைய கலேவெல பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களுடன் பீடி இலை, புகையிலை மற்றும் லொரி என்பன மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை தரப்பு தெரிவிக்கின்றது.