ஐக்கிய அமெரிக்காவானது இலங்கையில் எந்தவொரு இராணுவ தளத்தையோ அல்லது நிரந்தர இராணுவ பிரசன்னத்தையோ அமைக்க எண்ணவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ஸ்டெப்ளிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நிலவுரிமை உரிமைத்துவத்தை பெறவோ அல்லது மில்லேனிய சவால் ஒப்பந்தம் மூலம் கட்டுப்படுத்தவோ அமெரிக்கா விளையவில்லை. இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே மக்களுக்கு ஆதரவளிக்கவும் உதவவும் அமெரிக்க தனது திட்டங்களை நீடித்துக் கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.