நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரில் போலி முகப்புத்தக கணக்கொன்றை நடத்திச்சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற புலனாய்வு திணைக்களம் இவரை கைது செய்துள்ளது.
இவர், இன்றைய தினம் ரகசிய காவல்துறை விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தமது பெயரில் பேலி முகப்புத்தக மற்றும் ட்விட்டர் கணக்குகள் செயற்படுவதாக தெரிவித்து கடந்த 13 ஆம் திகதி நிதி அமைச்சரால் குற்ற புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை அடுத்தே, குற்ற புலனாய்வு திணைக்களம் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டது.
இந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவர் பலாங்கொட –பெல்மடுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.