ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை சர்வதேச காவல்துறையின் ஊடாக கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று இதற்கான அனுமதியை அளித்தது.
காவல்துறை நிதி மோசடி எதிர் விசாரணை பிரிவு, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்னவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலங்கை வான்படைக்கு மிக் வானூர்திகள் கொள்வனவின் போது நிதி சலவை சட்டத்தின் கீழ் மோசடி மேற்கொண்டதாக இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
முன்னர் உதயங்க வீரதுங்கவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு காவல்துறை நிதி மோசடி எதிர் விசாரணை பிரிவு கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், அவர் அந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரியவராக பெயரிடாமை காரணமாக, அந்த கோரிக்கையினை கோட்டை நீதவான் நிராகரித்திருந்தாமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸசங்க சேனாதிபதிக்கு, மருத்துவ சிகிச்சை பெற வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதன்பொருட்டு ஒருவருட காலம் அவருக்கு, அவகாசம் அளிப்பதாக, கொழும்பு முதன்மை நீதவான் உத்தரவிட்டார்.
அரசாங்கத்தின் நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியை தொடர்பில், கையூட்டல் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணைக்குழு, எவன்காட் நிறுவன தலைவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்தநிலையில், அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி அளிக்கப்படுவதாற்கு அந்த ஆணைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டது.
எனினும், நிஸ்சங்க சேனாதிபதிக்கு 50 லட்சம் ரொக்கப்பிணை மற்றும் மூன்று சரீர பிணைகளிலும் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.