ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து தற்போதைய பாதீட்டுடை தயாரியாரிப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் முன்கூட்டிய ஒதுக்கீட்;டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலநது கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுமான பணிகளுக்காக பெறப்பட்ட அதிகளவிலான கடன்களை மீள செலுத்த முடியாமையினாலேயே, அந்த துறைமுகம் சீனாவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இலங்கைக்கு 20 விகித உரிமையே இருக்கும் எனவும் நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்தார்.