வட்டுன, ரூமச்செல்ல பகுதியில் குன்று ஒன்றின் மீது ஏறி செல்பி எடுக்க முற்பட்ட நால்வர் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (16) மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் இருவர் காப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். கினிமெல்லகஹ, தெலிகட பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
குறித்த இளைஞர்களை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.