மழையுடனான காலநிலை ஆரம்பித்துள்ள நிலையில் டெங்கு நோய் பரவுதற்கான சாத்திய கூறுகள் நிலவுவதாக சுகாதார பிரிவு எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சூழலை சுத்தமான முறையில் பராமரிக்கும் படி தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மக்களை கோரியுள்ளது.
இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் 43 ஆயிரத்து 529 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவர்களில் 67 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.