சந்தேகத்திற்கிடமான 5 பேர் கைது

320 0
களுத்துறை, கொன்கஸ் சந்தி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கு இடமான மோட்டார் வாகனம் ஒன்றை பரிசோதனை செய்த சந்தர்ப்பத்தில் குறித்த நபர்கள் கைத செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 2 கிராம் 600 மில்லி கிராம் ஹெரோயின், வோக்கி டோக்கி ஒன்று மற்றும் 80500 ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலை உள்ள சந்தேக நபர் ஒருவரை பார்ப்பதற்காக குறித்த நபர்களை களுத்துறை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறையில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

பொரள்ளை பகுதியை சேர்ந்த 24 இற்கும் 33 வயதிற்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.