குவைத்தில் சட்டவிரோதமாக மதுபான நிலையம் ஒன்றை நடத்திச்சென்ற இலங்கை பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்படும்போது அவரிடம் இருந்து 10பீப்பாய் மதுபானம், 400 போத்தல்கள் உடனடி மதுபானம் என்பன கைப்பற்றப்பட்டன.
இதனை தவிர மதுபான தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் மற்றும் ஒரு ஆசிய நாட்டவர் ஒருவரை குவைத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
அவருடன் ஒரு அரபு நாட்டவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.