உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது. இதையடுத்து வீரர்கள் இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயினை சந்தித்துள்ளனர்.உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின.
இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக அமைந்தது. இதில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி இலக்காக நிர்ணயித்த 241 ரன்களை, இரண்டாவதாக களம் இறங்கிய இங்கிலாந்து அணி சேஸ் செய்தது.
இதனால் உலக கோப்பையை இங்கிலாந்து அணி முதன்முறையாக சொந்த மண்ணிலேயே கைப்பற்றியது. இதனை இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள பிரதமர் தெரசா மேயினை சந்தித்து இஙிலாந்து அணி வீரர்கள் கொண்டாடினர்.
போட்டியில் வென்ற கோப்பையினை கையில் ஏந்தியவாறு பிரதமர் தெரசா மே மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.