சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அருகே இன்று காலை மோட்டார்சைக்கிள் மீது மாநகர அரசு பஸ் மோதிய விபத்தில் 2 இளம்பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அருகே இன்று காலை மாநகர பஸ் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற லட்சுமி, ஷாலினி ஆகிய 2 இளம்பெண்கள் பஸ்சில் சிக்கினர். இதில் உடல் நசுங்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்த விபத்தில் இன்னொரு பெண் படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சைதாப்பேட்டையில் இருந்து நந்தனம் நோக்கி ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தபோதுதான் பஸ் மோதியுள்ளது.
இது தொடர்பாக கிண்டி போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று பலியான 2 பெண்கள் உடலையும் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பஸ் டிரைவர் சிவாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.