ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தினால் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஸ்கையாபெரலி விண்ணோடம் காணாமல் போயுள்ளதாக அஞ்சப்படுகிறது.
இந்த விண்ணோடம் நேற்று, செவ்வாய்க்கிரகத்தில் தரையிறங்கியதாக கூறப்பட்டது.
எனினும் அதன் பின்னர் அது குறித்த தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை.
இந்த விண்ணோடத்தில் இருந்து இதுவரையில் எந்த சமிக்ஞையையும் பெற முடியாதிருப்பதாக, விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்ணோடத்தை தேடும் பணிகளுக்காக, செவ்வாய்கிரகத்திற்கு அருகில் உள்ள செய்மதிகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த பணிகள் வெற்றியளிக்கவில்லை.
தற்போது இந்த விண்ணோடம் வெடித்திருக்கலாம் என்ற அச்சம் ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தொடர்ந்து இதனை தேடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.