காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கையெழுத்து திரட்டும் போராட்டம் ஒன்று கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிவில் சமூக அமைப்புகள் என்பன இணைந்து இந்த போராட்டத்தை நடத்தின.
கிளிநொச்சி சாலை சந்தி, இரணைமடு சந்தி மற்றும் பரந்தன் சந்தி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்களும், பொது மக்களும் பங்குபற்றினர்.
நல்லாட்சி அரசாங்கம் காணாமல் போனவர்கள் தொடர்பில் உடனடியாக தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதன்போது வலியுறுத்தப்பட்டது.