முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே பரிந்துரைகளை முன்வைத்திருப்பது வரவேற்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரச நிறுவனங்களில் மத ரீதியில் முஸ்லிம் பெண்களுக்கு மாத்திரம் அவர்களது கணவர் இறந்துவிட்டால் குறிப்பிட்டதொரு காலத்துக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்படும் சட்டம் இருக்கின்றது.
கணவர் இறந்தால் அவர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகள் கவலைகள் தீரும்வகையில் அவர்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படுகின்றது. ஆனால் ஏனைய மதப்பெண்களுக்கு இந்த சலுகை இல்லை. அதனால் அனைத்து பெண்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதே முறையாகும் என்றார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.