கம்போடியாவில் ஈழத்தமிழர்கள் இருவர், அடுத்தவாரம் நிரந்தரமாக குடியேற்றப்படவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கம்போடியாவின் குடிவரவுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
நவுறு தீவில் தங்க வைக்கப்பட்டிருந்த அவர்கள், சுயவிருப்பத்தின் பேரில் அங்கு குடியேற்றப்படவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
எனினும் அவர்களை அங்கு குடியேற்ற அகதிகள் உரிமை செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.