நெடுங்கேணி பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்;களை மானிய அடிப்படையில் வழங்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுங்கேணி விவசாய திணைக்களத்தினால் இவை வழங்கப்படவுள்ளன.
இதற்காக நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள நெடுங்கேணி, ஒலுமடு, குளவிசுட்டான், மாறாலிப்பை, வேலங்குளம், மாமடு, சேனப்பிளவு, கீரிசுட்டான், துவரங்குளம், கற்குளம், பட்டிக்குடியிருப்பு, பட்டறைபிரிந்த குளம், மருதோடை, வெடிவைத்த கல்லு, ஊஞ்சாற்கட்டி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் நெடுங்கேணி விவசாய திணைக்களத்திடம் கையளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.