அடுத்த தலாய் லாமா யார் என்பதை சீனாதான் முடிவு செய்யும், இதில் இந்தியா தலையிட்டால் அது இரு தரப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீனா சூசகமாக தெரிவித்துள்ளது.
திபெத் புத்த மத தலைவராக தலாய் லாமா உள்ளார். 1959-ம் ஆண்டு இந்தியா வந்த இவர் இமாசல பிரதேச மாநிலம், தர்மசாலாவில் உள்ளார். இவருக்கு தற்போது வயது 84. கடந்த சில காலமாகவே அடுத்த தலாய் லாமா யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.