ஈராக்கின் மோசுல் நகரில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியேற ஆரம்பித்துளளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த நகரை தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்பதற்கான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் பின்புலத்துடன், ஈராக்கிய படையினர் இதற்கான முன்னெடுப்பை மேற்கொள்கின்றனர்.
இந்த நிலையில் தீவிரவாதிகள் மோசுல் நகரில் இருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர்.
எனினும் சுமார் 5000 தீவிரவாதிகள் இன்னும் மோசுல் நகரில் இருந்து தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நகரில் இருந்து பொது மக்களும் வெளியேறி வருகின்றனர்.