அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களான ஹிலரி கிளின்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் தங்களுக்கு இடையிலான இறுதி நேரடி விவாதத்துக்கு முகம் கொடுக்கின்றனர்.
லாஸ் வேகாஸில் இந்த விவாதம் இடம்பெறுகிறது.
பாலியல் மற்றும் பெண்கள் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களால் டொனால்ட் ட்ரம்புக்கான ஆதரவு வெகுவாக குறைவடைந்துள்ளதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் ஹிலரி கிளின்டன் அமெரிக்க வாக்காளர் மத்தியில் போதிய பிரபலமடையவில்லை என்றும், அவரது தனிப்பட்ட மின்னஞ்சல் பாவனை தொடர்பில் பாதக நிலைமையை எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய விவாதம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் 8ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.