ஜீ.எஸ்.பி குறித்து பேச்சுவார்த்தை – ரணில்

311 0

pmஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் அனைத்து ஐரோப்பிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தும் பொருட்டு, பிரதமர் பெல்ஜியம் சென்றுள்ளார்.

அங்கு அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் உள்ளிட்ட பலரை சந்தித்து, இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்ற ஏனைய நாடுகளுடனும் தாம் பேச்சுவார்த்தை நடத்த தீர்hனித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.