ஹசலக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹெட்டிபொல, உல்பத்தகம குளத்தில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் குழுவுடன் நீராட சென்ற போது குறித்த மாணவன் நீரில் மூழ்கியுள்ளதாகவும் குறித்த மாணவனை ஹசலக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.
10 ஆண்டில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் ஹசலக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.