பேருவளை, அலுத்தென பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று (14) இரவு 10 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருவர் மற்றொருவரை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மக்கொன பகுதியை சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை தேடும் பணியில் பேருவளை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.