2017ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நவம்பர் மாதம் 10ம் திகதியும், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 18ம் திகதியும் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் டிசம்பர் மாதம் 10ம் திகதியும் இடம்பெற்றவுள்ளது.