லசந்த கொலைக்கான பொறுப்பை ஏற்று தற்கொலை செய்தவரின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது

311 0

download-28ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்து, கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்ததாகக் கூறப்படும் முன்னாள் இராணுவப் புலனாய்வு உறுப்பினர் இலந்தாரிகே எதிரிசிங்க ஜயமான்னவின் சடலம் இன்று (20) தோண்டியெடுக்கப்பட்டது.

கேகாலை, புவக்தெனிய பொது மயானத்தில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கல்கிஸ்ஸ நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட உத்தரவிற்கமைய, சடலத்தைத் தோண்டியெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பிரிவு உறுப்பினரின் சடலத்தைத் தோண்டியெடுக்க உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து, கேகாலை நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரும் சடலம் தோண்டப்பட்ட இடத்தில் பிரசன்னமாகியிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.