அமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு

337 0

201610200318191335_4-students-injured-in-shooting-near-san-francisco-high_secvpfசான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இருப்பினும் போலீசார் ஒவ்வொரு அறையாக தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் யாரும் சிக்கவில்லை.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் உடலின் மேல் பாகத்தில் குண்டு பாய்ந்த மாணவியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, கருப்பு நிற மேலுடையும், ஜீன்சும் அணிந்த 4 பேர் ஓடியதை சிலர் பார்த்துள்ளனர். அதே நேரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மாணவியை குறிவைத்து தான் நடத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தால் பெற்றோர்கள், மாணவர்கள் இடையே பதற்றம் நிலவுகிறது. இருப்பினும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நேற்று பள்ளிக்கூடம் வழக்கம் போல இயங்கியது.