விமானி அறையில் திடீர் புகை

301 0

201610191527569070_smoke-in-cockpit-prompts-lufthansa-jumbo-jet-emergency_secvpfஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து 345 பயணிகளுடன் ஆர்லந்தோ நகரை நோக்கிச் சென்ற லுப்தான்சா நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் ஜம்போ 747 ஜெட்’ ரக விமானத்தின் விமானி அறையில் இருந்து திடீரென புகை வெளியானதால் கனடா நாட்டில் அவசரமாக தரையிறக்க நேரிட்டது.

’லுப்தான்சா’ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் ஜம்போ 747 ஜெட்’ ரக விமானத்தின் 345 பயணிகளுடன் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் இருந்து அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஆர்லந்தோ நகரை நோக்கி நேற்று புறப்பட்டுச் சென்றது.

பிராங்பர்ட் நகரில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்து, அட்லான்டிக் பெருங்கடலின் வடக்கு பகுதியின் மேற்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் விமானி அறைக்குள் இருந்து திடீரென புகை வெளியானது.

இதையடுத்து, அருகாமையில் கனடா நாட்டின் கிழக்கு பகுதியான நியூபவுன்ட்லான்ட்  மாகாணத்தில் உள்ள கான்டர் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையை உடனடியாக தொடர்புகொண்ட அந்த விமானி, நிலமையை எடுத்துரைத்து, அவசரமாக தரையிறங்க அனுமதிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.

தரையிறங்க அனுமதி கிடைத்ததையடுத்து, அந்த விமானம் கான்டர் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், அதில் இருந்த 345 பயணிகள் உள்ளிட்ட மொத்தம் 363 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் ஜெர்மனியை தலமையிடமாக கொண்டுள்ள லுப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது.

கான்டர் விமான நிலையத்தில் இருந்து மாற்று விமானம் மூலம் பயணிகள் அனைவரும் ஆர்லந்தோ நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.