பாகிஸ்தான் முஸ்லீம் லீக் என் கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு

333 0

201610200400098747_nawaz-sharif-elected-as-pml-n-president-unopposed_secvpfபாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக, சவுத்ரி ஜாபர் இக்பால் தலைமையிலான 5 உறுப்பினரை கொண்ட கமிட்டி  அமைக்கப்பட்டது.  இந்த கமிட்டியின் மூலம் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் தலைவராக பாகிஸ்தான் பிரதமரும் அக்கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப்  மீண்டும் தேர்வு  செய்யப்பட்டுள்ளார். மூத்த தலைவர்களான சர்தாஜ் அசீஸ், சர் அன்ஜம் கான், யாகூப் கான், மிர் சங்கெஸ் கான் மாரி ஆகியோர் துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நவாஸ் ஷெரீப்பை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.