வாவெட்டி மலைக்கு சென்ற பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி !

637 0

ஈழத் தமிழர் வர­லாற்­றுடன் தொடர்­பு­டை­யதும்,  ஒட்­டு­சுட்டான் தான்­தோன்­றீஸ்­வரர் ஆல­யத்­துடன் தொடர்­பு­டை­ய­து­மான வாவெட்டி மலை ஆபத்தை எதிர்­கொண்­டுள்­ள­தாக பிர­தேச மக்கள் கவலை தெரி­வித்­துள்­ளனர் . தொல்­பொருள் வல­ய­மாக காணப்­படும் இந்த மலையில் பாரிய அளவில் கல் அகழ்வு இடம்­பெற்றுச் செல்­கின்­ற­மையே இதற்கு கார­ண­மாகும்.

வர­லாற்றுச் சிறப்பு மிக்க முல்­லைத்­தீவு ஒட்­டு­சுட்டான் தான்­தோன்­றீஸ்­வரர் ஆல­யத்­துடன் தொடர்­பு­டைய வாவெட்டி மலையில் அமைந்­துள்ள வாவெட்டி ஈஸ்­வரர் ஆல­யத்தில் நேற்று மக்கள் வழி­பா­டு­களை மேற்­கொண்­டனர்.

ஒட்­டு­சுட்டான் தான்­தோன்­றீஸ்­வரர் ஆலய வேட்டைத் திரு­விழா அன்று  ஆல­யத்­தி­லி­ருந்து வாவெட்­டி­மலை சிவன் ஆல­யத்­துக்குச் சென்று அங்கு விசேட பூசைகள் நடை­பெற்று வேட்­டை­யாடி ஆலயம் திரும்­பு­வது வழ­மை­யாகும். போரால் இது தடைப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்­டு­முதல் ஒட்­டு­சுட்டான் தான்­தோன்­றீஸ்­வரர் ஆலய வேட்டைத் திரு­விழா நடை­பெறும் நாளில் மக்கள் வாவெட்டி மலைக்கு சென்று அங்கு வழி­பா­டு­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றனர். அந்­த­வ­கையில்  நேற்று  ஒட்­டு­சுட்டான் தான்­தோன்­றீஸ்­வரர் ஆலய வேட்டைத் திரு­விழா நடை­பெறும் நிலையில்  இந்த மலையில் வழி­பா­டுகள் இடம்­பெற்­றன .

முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் மிக உயர்ந்த மலை­யாக இது காணப்­ப­டு­கின்­றது. இந்த மலையில் சுமார் 1800ஆம் ஆண்­டுக்கு முற்­பட்ட காலத்­தி­லி­ருந்து வன்­னியை ஆட்சி செய்த மன்­னர்­களால் ஆலயம் உரு­வாக்­கப்­பட்டு வழி­பட்டு வந்­த­மைக்­கான சான்­றுகள் இன்றும் அங்கு காணப்­ப­டு­கின்­றன.

மலையின் உச்­சியில் ஆலயம் இருந்­த­மைக்­கான கற் தூண்கள், மலையின் உச்­சியில் கொடி நாட்­டப்­பட்­ட­மைக்­கான கொடிப்­பீடம் ஆகி­யன இன்றும் காணப்­ப­டு­கின்­றன.

இந்த நிலையில் தொல்­பொருள் திணைக்­க­ளத்தால் தொல்­பொருள் அடை­யாளச் சின்­ன­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இந்த மலையில் கடந்த 10 வரு­டங்­க­ளுக்கு மேலாக கருங்கல் அகழ்வு பணிகள் மிக தீவி­ர­மாக இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன . நாளாந்தம் பல நூற்­றுக்­க­ணக்­கான டிப்பர்  கருங்கல் வெளி­யி­டங்­க­ளுக்கு இங்­கி­ருந்து கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றது . தென்­ப­கு­தியை சேர்ந்த இரண்டு நிறு­வ­னங்கள் அனு­ம­தி­களை பெற்று இங்கே கல்­லு­டைக்கும் ஆலை­களை அமைத்து  பெரு­மெ­டுப்பில் கல் அகழ்வில் ஈடு­பட்டு வரு­கின்­றன.

இதனால் தமி­ழர்­களின் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இந்த மலை அழி­வ­டைந்து போகும் அபாயம் தோன்­றி­யுள்­ள­தாக மக்கள் கவலை தெரி­வித்­துள்­ளனர் தொல்­பொருள் திணைக்­க­ளத்தின் ஆளு­கையில் இருக்கும் இந்த மலையில் தொல்­பொருள் இடங்கள் அழி­வ­டையும் வகையில் எவ்வாறு அகழ்வுப் பணியை மேற்கொள்ள அனுமதி வழங்க முடியும் என  மக்கள்  கேள்வி எழுப்புகின்றனர்.

ஈழத் தமிழர்  வரலாற்றுடன் தொடர்புடைய இந்த மலையை தொல்பொருள் திணைக்களம் பாதுக்காக்கவேண்டும் எனவும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.