நல்லாட்சியை 2020 வரை அசைக்கமுடியாது-மைத்திரிபால சிறிசேன

288 0

my-jpg2_இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சி அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டுவரை அசைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார்.மஹஒய நீர்வழங்கல் திட்டத்தை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.

தேசிய அரசாங்கம் நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்துவருகிறது. இந்த குறிக்கோளில் மாற்றங்களை ஏற்படுத்தபோவதில்லை.அதேநேரம் மஹிந்தவின் அரசாங்கத்தை போன்று தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுபவர்களை வெள்ளை வான்கள் மூலம் கடத்திய கலாசாரம் தமது நல்லாட்சி அராசங்கத்தில் இல்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.