மிஹின் லங்கா விமான சேவை மூடப்படவுள்ளதாக அறிவித்துள்ளதையடுத்து அதன் தலைமைக் காரியாலயத்தில் அதிகாரிகள் இருவரை அடைத்துவைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கே பதற்றமான நிலை ஏற்பட்டிருந்தது. மிஹின் லங்கா காரியாலயத்தின் மனித வள முகாமையாளர் மற்றும் நிதி முகாமையாளர் மற்றும் நிர்வாக முகாமையாளர் ஆகியோரையே ஊழியர்கள் தடுத்துவைத்திருந்தனர்.
எதிர்வரும் 30ஆம் திகதியுடன் மிஹின்லங்கா விமான சேவை மூடப்பட்டு அது சிறீலங்கன் எயார் லைன் விமானசேவையுடன் இணைக்கப்படவுள்ளதாக அண்மையில் சிறீலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதனால் தமக்கு தொழில்வாய்ப்பைப் பெற்றுத் தருவது குறித்தோ, இழப்பீட்டைப் பெற்றுத் தருவது குறித்தோ அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், தமக்கு தொழிலுக்குரிய உத்தரவாதத்தினை வழங்குமாறும், தம்மைத் தொழிலிருந்து நீக்குவதாயின் தமக்கான இழப்பீட்டை வழங்குமாறும் கோரி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.