தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக்கொடுப்பதாக நல்லாட்சி வாக்களித்திருந்தது. அதற்கமைய கூட்டு ஒப்பந்த்தின் போது அரசாங்கம் மக்கள் பக்கமிருந்து செயற்ப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் கூட்டு ஒப்பந்த கைச்சாத்தின் போது அரசாங்கம் முதலாளிமார் பக்கமே சார்ந்திருந்து அதனால் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்து என்ற பேரில் தொழிலாளர்கள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளனர் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த காலங்களில் என்றும் இல்லாதவாறு தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி மலையகம் தழுவிய விதத்தில் பாரிய போராட்டம் வெடித்தது.
இதன் போது பிரதான தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு பக்கபலமாக நிற்கவில்லை.
இவ்வாறான நிலையிலும் சுயாதீனமாக தொழிலாளர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அவர்கள் வாழும் வீடுகள் அவர்களின் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்துக்கொள்ள போதுமானதாக இல்லை.
இதனிடையே பொருளாதார கஷ்டமும் தலை தூக்கியதால் மக்கள் ஒன்று திரண்டு சம்பள அதிகரிப்பை வலியுத்திய போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கூட்டு ஒப்பந்த விடயத்தில் அரசாங்கம் மக்கள் பக்கமிருந்து செயற்பட தவறிவிட்டது. இந்ந ஒப்பந்தத்தில் அடிப்படை சம்பளத்துக்கு 50 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தொழிலாளர்களுக்கு போதுமான தொகை அல்ல.
குறைந்த பட்டசம் அடிப்படை சம்பளம் 550 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் அதற்கு மாறாகவே அரசாங்கம் செயற்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கான நிலுவை கொடுப்பனவும் வழங்கப்படவில்லை. தற்போது நீதிமன்றம் செல்வதாலும் இந்த சிக்கலை களைய முடியாது.
அதனால் பாராளுமன்றத்தில் இது தொடர்பல் வலியுறுத்தி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம். அத்துடன் நிலுவை கொடுப்பனவை விரைவாக பெற்றுக்கொடுப்பதற்கான சட்டமூலம்மொன்றை அமுல்படுத்த வேண்டும் என்றும் அழுத்தம் கொடுப்போம் எனவும் தெரிவித்தார்.