முதல்வர் உடல்நிலை – வதந்தி பரப்பிய ஒருவர் கைது

330 0

2_2088683g_3050180fமுதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து ஃபேஸ்புக்கில் தவறாக வதந்தி பரப்பியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், அவரது உடல்நிலை பற்றி சமூக வலைதளங்களில் ஏராளமான வதந்திகள் பரப்பப்படுகின்றன.

இதை தடுக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் பலர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

ஆன்லைன் மூலமும் பலர் புகார் கொடுத்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு பொலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்தநிலையில், முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறாக வதந்தி பரப்பியதாக, தூத்துக்குடி மாவட்டம் கோட்டையான் தோப்பு பகுதி விவேகானந்தா நகரை சேர்ந்த சகாயம் என்பவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலீஸார் கைது செய்தனர்.

தனது முகநூல் பக்கத்தில் இருந்து ஜெயலலிதா உடல்நிலை பற்றிய வதந்தி செய்திகளை நண்பர்களுக்கு அனுப்பியதற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.