பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் அர்ஸத் கான். டீக்கடை ஒன்றில் வேலை செய்து வரும், இவரின் கருவிழிகள் நீல நிறத்தில் இருக்கும்.
வசிகரீக்கும் கண்கள் போன்று இருப்பதால், இந்த கடைக்கு டீ குடிக்க வந்த நபர் ஒருவர் இவரை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
டீக்கடையில் வேலை செய்வதைவிட, இவர் மாடல் துறையில் வேலை செய்யலாம் என பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதன் மூலம் இந்த புகைப்படம் வைரலானது.
தற்போது, இந்த புகைப்படத்தின் மூலம் இவரை மாடலாக ஒப்பந்தம் செய்வதற்காக பல்வேறு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அர்ஸத் கான் சினிமாவில் நடிக்கத் தயார் என்று கூறுகிறார். ஆனால் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பலர் ஆர்வம் காட்டுவதால் அவர்களுக்கு போஸ் கொடுப்பதால் தான் டீ போடும் வேலையும் கெட்டுவிடுகிறது என்று கவலைபடுகிறார்.