மக்களுக்கு நாட்டில் நிலவும் உண்மையான நிலைமை தொடர்பில் வெளிக்காட்டுவதற்கான முறைகள் எதுவும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும் அதனை வெளிப்படுத்த எவ்வித முறையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
பூஜாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் சாபம் விட தயாராக இருப்பதாகவும் எதிர்காலத்தில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது புத்திசாதுரியமாக மேற்கொள்ளுமாறும் நாட்டிற்காக தான் மக்களிடம் வேண்டிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.