யாழ்ப்பாணம் மீசாலையில் லொறியுடன் மோதுண்டு இளைஞர் பலி!

5721 19

downloadயாழ்ப்பாணம் மீசாலை புத்தூர் வீதியில் வேம்பிராய் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.50 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள்களை ஏற்றிவந்த லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதி ஓரத்தில் கதைத்துக் கொண்டிருந்த இளைஞர் மீது மோதியுள்ளது.

சம்பவத்தில் மட்டுவிலைச் சேர்ந்த 36 வயதுடைய பேரின்பராசா ஸ்ரீரஞ்சன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

லொறியின் சாரதியும், நடத்துநரும் காயடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment