சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஸ்யாவின் படைகள் இணைந்து அலெப்போ நகர் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
அலெப்போ நகரில் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லும் வகையில் 48 மணிநேர தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இருதரப்பினரும் முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து, தற்காலிக போர்நிறுத்தம் செய்ய சிரியா-ரஸ்யா கூட்டுப்படைகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், சிரியா-ரஸ்யா கூட்டுப்படைகள் போர்நிறுத்தம் இரண்டாவது நாளாக தொடர்கின்றது.
இந்த விவகாரம் தொடர்பாக பெர்லின் நகரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே நீண்ட காலத்திற்கு போர் நிறுத்தத்தை கொண்டு வருவதற்கு ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறினார்.