மீண்டும் நீதிமன்றம் சென்று பதவி காலத்தை நீடிக்க ஜனாதிபதி முயற்சிப்பாராயின் அதற்கு எதிராக பொதுஜன பெரமுனவும் கடும் சட்ட நடவடிக்கை என பேராசிரியர் ஜீ.எல்.பீறிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பதவிக்காலம் குறித்து ஜனாதிபதி மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவது அரசியலமைப்பிற்கு முரணான செயலாகும். ஏனெனில் 19 அரசியலமைப்பில் பதவி காலம் தொடர்பாக தெளிவான வியாக்கியாணம் எற்கவே வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.