சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழலால் அங்கிருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு மக்கள் அகதிகளாக புலம்பெயர்ந்து வருகின்றனர்.
அவ்வாறு வரும் போது அவர்கள் ஆபத்தான கடல் வழி பாதையில் பயணிக்க வேண்டியிருக்கிறது.
பல நேரங்களில் விபத்துக்களில் உயிரிழப்பு ஏற்படுகின்றது.
இந்த நிலையில், மத்திய தரைக்கடல் பகுதியில் மீட்பு நடவடிக்கையின் போது 5 அகதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
புலம் பெயர்ந்த 300 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலி கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 5 படகுகளில் இந்த அகதிகள் தப்பித்து வந்தனர். இத்தாலி நாட்டுடன் ஐரீஸ் கடற்படையும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
இந்த ஆண்டு மட்டும் இத்தாலி நாட்டில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஐ.நா. தகவலின் படி இதுவரை சுமார் 3,626 பேர் இந்த பயணங்களின் போது உயிரிழந்துள்ளனர்.