பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்காக 1,000 ஏக்கர் காணிகளை சுவீகரிக்க நடவடிக்கை நில அளவை பணிகள் முழு வீச்சில்

291 0

palaly-ariport-660x330வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பலாலி விமான நிலையத்தின் விஸ்தரிப்பிற்கேன இனங்காணப்பட்ட பொது மக்களின் சுமார் ஆயிரம் ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கான நில அளவை செய்யும் பணிகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இச் சுவீகரிப்பு நடவடிக்கை தொடர்பாக தெல்லிப்பளை பிரதேச செயலரினால் அந்தந்த பகுதி கிராம சேவகர் ஊடாக காணி உரிமையாளர்களுக்கு அறிவிப்பும் விடுக்கப்பட்டள்ளது.
பலாலி விமான நிலையத்தில் விஸ்தரிப்பிற்காக மக்களுடைய காணிகளை சுவீகரிப்பதற்கான கடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வலி.வடக்கு மக்கள் பல போராட்டங்ளை நடத்தினார்கள்.
இந்நிலையில் பலாலி விமான நிலையத்தினை புணருத்தானம் செய்யும் இந்திய அரசாங்கத்தின் ஊடுhக விஸ்தரிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ள ஆய்வு குழு ஒன்று அங்கு சென்று ஆராய்வுகளை மேற்கொண்டிருந்தது.
இதன்படி பலாலி விமான நிலைய புணரமைப்பிற்கு மேலதிக காணிகள் தேவை இல்லை என்றும், தமது புணரமைப்பு பணிகளுக்கு பொது மக்களின் காணிகள் தேவையில்லை என்றும் உத்தியோக பூர்வமான அறிவிப்புக்களை விடுத்திருந்தது.
இருப்பினும் நேற்று பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கென இனங்காணப்பட்ட காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் நில அளவை செய்யும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி J/240 கிராம சேவகர் பிரிவு தென்மயிலை, J/246 கிராம சேவகர் பிரிவு மயிலிட்டி வடக்கு, J/256 கிராம சேவகர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரும் ஏக்கர் காணிகளிலேயே நில அளவை பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலருடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முயட்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது சாத்தியப்படவில்லை.