ஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு 12 பேர் உடல் சிதறி உயிரிழப்பு

482 0

ஆப்கானிஸ்தானின் கஜினி நகரத்தில் உளவுபடையினரை குறிவைத்து வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை நடந்து வருகிற போரை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். இதற்காக தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளோடு அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் நேரடி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இப்போது கத்தார் நாட்டின் தலைநகரான டோஹாவில் 7-வது சுற்று பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும் போர் நிறுத்தம் செய்ய மாட்டோம் என்று தலீபான்கள் அறிவித்து, தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று ஆப்கானிஸ்தானின் கஜினி நகரத்தில் உளவுபடையினரை குறிவைத்து வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.

இந்த கார் குண்டு வெடிப்பில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 179 பேர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் பற்றிய தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்சுகளில் அனுப்பி வைத்தனர்.

இந்த தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றனர்.