இன்றுடன் எங்கள் சக நண்பன் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 16 வருடங்கள் கடந்து செல்கின்றது. இலங்கையினில் தமிழர் தாயகத்தினில் படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான எமது மக்களிற்கு எவ்வாறு நீதி கிடைக்கவில்லையோ,அதே போன்று படுகொலை செய்யப்பட்ட நிமலராஜன் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களிற்கும் இது வரை நீதி கிடைக்கவில்லை.
நிமலராஜன் படுகொலையுடன் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழ் ஊடகப்பரப்புக்கு எதிரான படுகொலை கலாச்சாரம் 41 ஊடகவியலாளர் மற்றும் ஊடகப்பணியாளர்களை கொல்லவோஅல்லதுகாணாமல் போகவோ செய்துள்ளது. இவர்கள் எவர் தொடர்பாகவும் இன்று வரை இலங்கை அரசு வாய் திறக்க மறக்கின்றது.தென்னிலங்கையினில் படுகொலையான அல்லது காணாமல் போயுள்ள எமது சக ஊடக நண்பர்கள் லசந்த மற்றும் பிரகீத் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்ததுடன்,ஊடகப்படுகொலைகளிற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காண்பிக்க நல்லாட்சி எனச்சொல்லிக்கொள்ளும் இந்த அரசும் பாடுபட்டு வருகின்றது.ஆனால்; இந்த விசாரணைகள் கூட தள்ளாடி வரும் நிலையினில் தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பான விசாரணைகளை பெயரளவினில் கூட இந்த அரசும் ஆரம்பிக்க தயாராக இருக்கவில்லை.
இலங்கை ஜனாதிபதி முதல் பிரதமர்,ஊடகஅமைச்சர்,காவல்துறை அதிபர் என வடக்கு ஊடகவியலாளர்கள் பல தடவைகளாக கோரிக்கைகளை முன்வைத்திருந்த போதும், அவற்றிற்கு உரிய அங்கீகாரமோ கவனமோ கொடுக்கப்படவில்லை. மாறாக அவை ஒதுக்கப்பட்டுள்ளன.
இறுதியாக இவ்வாண்டின் நடுப்பகுதியினில் நல்லெண்ண விஜயமென பயணம் செய்த வடக்கின் அனைத்து ஊடக அமைப்புக்களினையும் சேர்ந்தவர்களும் இலங்கை ஜனாதிபதி,பிரதமர்,ஊடக அமைச்சர் என அனைவரையும் நாடாளுமன்றினில் ஒரே மேடையினில் சந்தித்து ஒட்டு மொத்தமாக படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போயிருக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் தொடர்பினில் சர்வதேச ஊடக அமைப்புக்களின் களிப்புடன் விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தோம்.ஜனாதிபதியோ,பிரதமரோ மரியாதை நிமித்தமேனும் கூட வாய்திறக்காது மௌனம் காத்திருந்தமை நாம் கோரிய விசாரணை பற்றிய அரசின் அக்கறையற்ற நிலைப்பாட்டை சொல்லி நின்றிருந்தது.இச்செயற்பாடு, இந்த அரசாங்கமும் நீதியை வழங்காது என்று பரவலாக மேலெழுந்துவரும் அபிப்பிராயத்தை பலப்படுத்தியுள்ளது.
தமிழ் ஊடகவியலாளர்களதும் ஊடகப்பணியாளர்களதும் கொலைகளும் காணாமல் போதல்களதும் சூத்திரதாரிகள் இன்றுவரை சாதாரணமாக நடமாடிக்கொண்டிருக்கின்ற நிலையினில் அவர்களை பாதுகாக்க இந்த அரசும் முற்பட்டுள்ளதாவென்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளது.
இதேவேளை அண்மைக்காலமாகவடகிழக்கினில் ஊடகவியலாளர்கள்,ஊடகப்பணியாளர்கள் பணியாற்ற ஏற்;பட்டுள்ள சூழலை காரணங்காட்டிவிசாரணைகளை பற்றி பேசாதிருக்க முன்வைக்கப்படும் வாதங்கள் நியாயமாக இருக்கப்போவதில்லை.குறிப்பாக குற்றவாளிகள் தண்டிக்கப்படாத சூழல் மீண்டும் இவ்வாறான மோசமான சூழல் ஏற்படாதென்தை நிச்சயப்படுத்தமாட்டாது.புதிய அரசின் கீழும் கடந்த ஆண்டிலும் இவ்வாண்டிலும் தமிழர் தாயகத்தினில் ஊடகவியலாளர் மீதுகட்டவிழ்த்து விடப்பட்ட சில சம்பவங்கள் அதனை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கின்றன.
அத்துடன்,அண்மைக்கால எமது மக்களது வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற அரசியல்வாதிகள் சிலர்,ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை தமது பணிகளை சுதந்திரமாக மேற்கொள்ளவிடாது மறுக்கின்ற குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்றுள்ளன.இலங்கை அரசு தகவல் அறியும் சட்டமூலத்தைநிறைவேற்றிஅதனைசாதனையாககாண்பிக்க,மறுபுறம் சாதாரண மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தினில் நடப்பவற்றை கூட மக்கள் அறிவதை தடுக்கும் முயற்சியில் சில அரசியல்வாதிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். ஜனநாயகப் பண்புகளுக்கு எதிராகவும் மக்களுக்கு விரோதமாகவும் செயற்படும் அரசியல்வாதிகள் மக்கள் பிரதிநிதியாக இருக்க தகுதியற்றவர்களே. அதிலும் ஊடக நிறுவனங்கள் மீதான அழுத்தங்கள் மற்றும் அதிகார பலப்பிரயோகம் நியாயப்படுத்தக்கூடியதல்ல.
தகவல் அறியும் உரிமை சட்டத்தை சாதனையாக காண்பித்துக்கொள்ளும் இந்த அரசு மறுபுறம் அதனை அமுல்படுத்துவதில் திட்டமிட்டு மேற்கொள்ளும் இழுத்தடிப்பு அதன் உண்மை நோக்கத்தை கேள்விக்குட்படுத்திநிற்கின்றது.
இன்றைய தினம் வடகிழக்கின் அனைத்து ஊடகஅமைப்புக்கள் சார்பிலும்
-படுகொலையான மற்றும் காணாமல் போயுள்ள ஊடகவியலாளர்கள்,ஊடகப்பணியார்களிற்கு சர்வதேச ஊடக அமைப்புக்களின் பங்களிப்புடன் காலதாமதமின்றிய விசாரணை
-ஊடகவியலாளர்கள் தமது பணிகளை சுதந்திரமாக ஆற்றுவதற்கான சுதந்திரத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதிப்படுத்தல்
தகவல் அறியும் உரிமைசட்டத்தை உடனடியாக அமுல்படுத்தல்
ஆகிய எமது கோரிக்கைகளை மீண்டுமொருமுறை சர்வதேசத்திற்கும் இலங்கை அரசிற்கும் வடக்கு, கிழக்கு ஊடக அமைப்புக்கள் சர்பில் யாழ்.ஊடக அமையத்தினால் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.
- Home
- முக்கிய செய்திகள்
- கொல்லப்பட்ட, காணாமல் போன் ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச ஊடக அமைப்புக்களின் பங்களிப்புடம் விசாரணை வேண்டும் -யாழ்.ஊடக அமையம்-
ஆசிரியர் தலையங்கம்
-
உங்கள் இருப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள்!
October 15, 2024 -
தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்!
July 5, 2024 -
உலகிலேயே மிகச்சிறந்த தானம் இரத்த தானம்!
June 14, 2024
தமிழர் வரலாறு
-
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024 -
யாழ். போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்!
October 21, 2024
கட்டுரைகள்
-
அரசியல் ஞானியாக விளங்கித் தேசத்தின் குரலான பாலா அண்ணா.
December 14, 2024 -
5000 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிப்பு
October 3, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
பிரான்சில் ஐரோப்பிய ரீதியிலான சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி – 2024
December 18, 2024