சிறிசேன லண்டனிற்கு விஜயம்!

305 0

மைத்திரிபால சிறிசேன லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

தனிப்பட்ட விஜயமாக அவர் இன்று(திங்கட்கிழமை) லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது மகன் தஹாம் சிறிசேனவின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு லண்டனிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்க மூன்று நாட்கள் தங்கியிருப்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, தனது லண்டன் விஜயம் காரணமாக நாளை கூடவிருந்த அமைச்சரவை கூட்டத்தினை நேற்று கூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.