எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தேர்தலை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுமென்று உள்ளக பொது நிர்வாக அலுவல்கள் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
அரசியல் யாப்பில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்காக உரிய காலம் குறிப்பிடப்படவில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் அனைத்து இன மக்களினதும் வாக்குகள் மூலம் வெற்றி பெறக்கூடிய கட்சி ஐக்கிய தேசிய கட்சியாகும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.