உள்ளுர் இழுவைப்படகுகளை தடைசெய்யக் கோரி யாழில் முற்றுகைப் போராட்டம் (படங்கள் இணைப்பு)

498 0

k800_unnamedஉள்ளுர் இழுவை படகுகளை தடைசெய்யுமாறு கோரி நெடுந்தீவு மீனவர்கள் இன்று யாழ்.மாவட்டச் செயலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக ஒன்று கூடிய அவர்கள் செயலகத்தின் பிரதான நுழைவாயிலை பூட்டி ஒருவரையும் உள்ளே போக விடாமலும், உள்ளே இருப்பவர்களையும் வெளியில் செல்ல விடாமலும் தமது போராட்டத்தினை தொடர்ந்திருந்தனர்.
மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அமர்ந்திருந்த அவர்கள் தமது முற்றுகைப் போராட்டத்தினை சுமார் 2 மணித்தியாலங்கள்வரைக்கும் நடாத்தியிருந்தனர்.
போராட்டத்தின் முடிவில் உள்ளுர் இழுவைப் படகுகளின் அடாவடித் தனத்தினால் தொழிலை இழந்து பட்டினிச் சாவினை எதிர்கொள்ளும் தங்களை காப்பாற்றுமாறும், இச் சட்டவிரோத தொழினை முழுமையாக தடை செய்யுமாறு கோரியும் மகஜர் ஒன்றினையும் அவர்கள் மாவட்டச் செயலரிடம் கையளித்திருந்தார்கள்.

k800_unnamed-1

k800_unnamed