இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளராக சுனேத்ரா ஜயசிங்க தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த டில்ருக்ஸி டயஸ் பண்டாரநாயக்க பதவியை ராஜினாமா செய்துகொண்டமையினை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு செய்திகள் தெரிவித்துள்ளது.
கடந்த 17 ஆம் திகதி தனது ராஜினாமா கடிதத்தை டில்ருக்ஸி ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார். இருப்பினும் அந்த நேரத்தில் ஜனாதிபதி பிரிக்ஸ் – பிக்ஸ்டெக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றிருந்தார்.
இந்நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளராகப் பணியாற்றிய சுனேத்ரா ஜயசிங்க தற்போது பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.