த.தே.கூட்டமைப்பினரை சந்தித்தார் ரீட்டா!

344 0

samஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா சிறுபான்மை இன விவகாரங்களை ஆராயும் விஷேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார். இலங்கையின் பாராளுமன்ற கட்டட தொகுதியில் இன்று புதன்கிழமை (19.10.2016) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பின் போது இலங்கையில் தமிழ் மக்கள் நீண்டகாலமாக பல்வேறு இன மத ரீதியிலான இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்ற நிலையில், மக்களுக்கு சம அந்தஸ்து அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.

இலங்கைக்கு 10 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வந்துள்ள ஐ.நா சிறுபான்மை இன விவகாரங்களை ஆராயும் விஷேட தூதுவர், வடக்கு, கிழக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.